Poem




1.
காதல் மட்டும் தான் வாழ்கை என்ற மாயை உலகில் வாழும் என் தோழனுக்காய்...!

சாதனைகள் தவம் கிடப்பது
உனக்காகத்தான்
அவள் சாயலை மட்டுமே
உள்ளத்தில்
பூட்டிவைத்து
சகலதையும்
இழந்து விடாதே!
காதலும் வாழ்கையில்
வேண்டும்
உன் கனவுகளும்
மெய்யப்பட வேண்டும்
அவள் என்ற ஒருத்திக்காய்
உன்
உலகத்தையே இழக்க...
உன் உலகம் உனக்கானது மட்டுமல்ல.......
உன்னையும் தாண்டி
உன் பெற்றோருக்கானது....
உன் உறவுகளுக்கானது....
இந்த உலகுக்கானது....

Link

2.

கவலை....!

கசக்கிப் பிழியும் வறுமை....
தலைதூக்க விடாத
ஆதிக்கம்....
நம்பிக்கையை ஏமாற்றும்
உறுதி மொழிகள்....
கடமையை காப்பாற்றாமல்
கடமைக்கு செய்யும்
பணிகள்....
பொய்யும் புரட்டும்
பேராசையுமாய்
ஓலமிடும்
வாழ்கை சந்தை.....
நிராசையை பரிசளிக்கும்
அதர்மம்....
இவற்றின் முன்...
வெறும் விட்டில்
பூச்சி நான்....



3.

தனிமையில் ஒரு வறுமை...!

மிரட்டும் தனிமையின்
மடியில்
விரட்டும் பசிக்கொடுமையின்
பிடியில்
தோல் சாய துணையில்லா
பாலைவன தேடலில்
கரம் தந்து எழுப்ப
கையில்லா
இருட்டில்
கனமான சுமையை
இறக்க இடமில்லா
உலகில்
அனாயாசமாய்
கடந்து போன
அவர்களை கண்ட போது......
மெல்லப்பிறந்தது
"ஞானம்"



4.

தொடரட்டும் நம் அன்பு....!

உன் உன்னத பேச்சால்
பேதலித்து போனேன்...
உன் வெட்கம் எனக்கு
வேடிக்கையாக இருந்தது...
உன் முகம் என்றும்
புன்னகையுடன் இருப்பதை
பார்த்து என் புன்னகையும்
தொடர முடிந்தது...
உன் அனுபவங்கள் எனக்கு
அழகாக தெரிந்தது...
உன் ஆழமான உள்ளத்தில்
என் நினைவுகள் அழியுமோ..?
இல்லை என் 
ஆசைகள் அழியுமோ..?
உன்னுடன் இருந்த நினைவுகள்
மறக்க முடியாதது,
மறுக்கவும் முடியாதது....
நீ என்னுடன் இருப்பாய்
நான் உன்னுடன் இருப்பேன்
என்று இருவரும்
எதிர்பார்க்கவில்லை...!
இனி வரும் வசந்த 
நாட்களில்
அன்பு தொடரட்டும் நம்
அன்பான எதிர்பார்ப்பிற்கு...!



5.

உன் நினைவுகளுடன் என்றென்றும்....!

மறவாத உன் நினைவுகளுடன்
என்றென்றும்
வற்றாத என் நினைவுகளில்
ஆறாத தலும்புகளுடன்
உன் நினைவுகள்
நீந்திக்கொண்டிருகின்றன...
சிறிது நேரம் உன் நினைவுகளில்
மூழ்கி விட்டால் கண்களின்
வழியே எட்டி பார்க்கின்றது
உன் நினைவுகள் ...
உன் நினைவுகள் நலமாக தான்
உள்ளது என்னுடன்
என் நினைவுகள் தான்
உன்னை பற்றி நினைத்து
கொண்டிருக்கின்றது
என் நினைவிழந்து..
உன்னுடனான பொழுதுகள்
சொர்க்கமாக கரைந்தாலும்
நீ  இல்லாத வாழ்க்கை
உன் நினைவுகளோடு
சொப்பனம் கண்டு
கரையுதடி என் பொழுதுகள்...

6.

தொலைவேன் என்று

தெரியும் ஆனால்

உனக்குள் இப்படி

மொத்தமாய்

தொலைவேன் என்று

நினைக்கவில்லை.

                       by  இவன் குரு

7.

அவள்!

என்னை கடந்து

செல்லும்போது தான் தெரிந்தது....!

அவள்!

என்னை கடந்து

செல்லவில்லை....!

என் இதயத்தை

கடத்தி

சென்றுவிட்டாள்,

என்று.....!

 by  இவன் குரு.

No comments:

Post a Comment